• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிகில் ஆடியோ வெளியீட்டு விழா- கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

September 24, 2019

பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசின் உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம்
தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடுமபத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுமட்டுமின்றி அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றார். விஜயின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க