March 12, 2020
தண்டோரா குழு
மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். கடந்த மாதம் மாஸ்டர் படப்பிடிப்பின் போது, விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், பனையூரில் உள்ள நடிகர் விஜயின் பங்களாவிற்கு இன்று காலை 3 வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர்.சீலிடப்பட்ட அறை, லாக்கர்களைத் திறந்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
பனையூர் எட்டாவது அவன்யூவில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக தெரிவித்து சோதனையின் போது வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
மேலும் விஜய்யின் சம்பள விவரத்தையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்