• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பொங்கல் விழா

January 10, 2020

பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் விதமாக நடைபெற்ற பொங்கல் விழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம், இதே போல் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக கல்லூரி வளாகத்தில் இன்று பொங்கல் விழா கல்லூரி மாணவர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் கிராமபுரங்களில் கடைபிடிக்கும் தமிழர்களின் கலாச்சாரமான பட்டு வேஷ்டி, பட்டு சேலைகள் அணிந்து பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கட்டவண்டி ஓட்டுதல், கிளி ஜோசியம் பார்த்தல்,பொங்கல் வைத்தல்,நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தெய்வத்தை வழிப்பட்டது பார்வையாளர்களிடயே வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க