• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லுரியில் மின்சார பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான பயிற்சி மையம் துவக்கம்

November 24, 2021 தண்டோரா குழு

பெங்களுரூவிலுள்ள ஸ்னெய்டர் எலக்ட்ரிக் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம், வருங்கால மாணவர்கள் பயன்பெறும் வண்ணம், மின்சார பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கான பயிற்சி மையத்தினை பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லுரியுடன் இணைந்து,கல்லூரி வளாகத்தில் அமைத்துள்ளது.

மின்சார பணியாளுகைக்கான [எலக்ட்ரீஷியன்] பயிற்சி மையத்தின் திறப்பு விழா இன்று கோவை பீளமேட்டிலுள்ள பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் முனைவர். பா.கிரிராஜ் தலைமையில் நடைபெற்றது.

பிஎஸ்ஜி பொறியியற்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் , மாணவ மணிகள் கலந்து கொண்ட திறப்பு விழா நிகழ்ச்சியினை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் எஸ்.சசிகலா குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

திறப்பு விழா நிகழ்விற்குப் பின்னர் கல்லூரி அவைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வினில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் எஸ்.சசிகலா வரவேற்புரை ஆற்றிட , கல்லூரி முதல்வர் முனைவர் பா.கிரிராஜ் பிஎஸ்ஜி நிறுவனங்களின் பாரம்பரியத்தினையும், அதன் வளர்ச்சியினையும் சொல்லி தொடக்கவுரையாற்றினார்.

ஸ்னெய்டர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் பிரசாந்த் ஷெட்டி, மனிதவள மேம்பாட்டுத்துறை முதுநிலை மேலாளர் கே.ஹரிபிரசாத் கோவைக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பினைச் சொல்லி உரையாற்றிட, அடுத்து பேச வந்த கோவை மண்டல தலைமை அலுவலர் எஸ்.வி.மாயக்கர் , பிஎஸ்ஜியுடன், இணைந்து பயணிக்கும், ஸ்னெய்டர் இந்தியாவின் பெருமையினைச் சொல்லி மகிழ்ந்தார்.

ஸ்னெய்டர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனங்களின் துணைத்தலைவரான உதய் சிங் இந்தியாவின் வளர்ச்சி மற்றும், எதிர்காலம், கற்றறிந்த மாணவர்களின் கரங்களில் தான் , என்றும், இம்மாதிரியான பணியினைக் கற்றுத்தரும் மையங்களை , தமிழகத்தின் கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து , குறிப்பாக பிஎஸ்ஜி, பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்துவதில் பெருமிதம் அடைகிறோம்,,என்றார்.

மின்னியல் துறை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க