• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜி நர்சிங் கல்லூரி நிறுவனர் நாள் விழா

November 7, 2025 தண்டோரா குழு

பிஎஸ்ஜி நர்சிங் கல்லூரி நிறுவனர் நாள் விழா பிஎஸ்ஜி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சில் பதிவாளர் பேரா. டாக்டர் எஸ்.அனி கிரேஸ் கலையமதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

பிஎஸ்ஜி & சன்ஸ் சாரிட்டீஸ் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி,பிஎஸ்ஜி நிறுவனங்கள் சுகாதாரம் மற்றும் நர்சிங் கல்வி துறைகளில் வழங்கி வரும் சிறப்பான பங்களிப்பை சிறப்பித்தார்.

தனது உரையில்,பேரா.டாக்டர் அனி கிரேஸ் கலையமதி,சுகாதார அமைப்பில் நர்சுகள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தி, தொழில்முறை நெறிமுறைகள்,இரக்கம் மற்றும் தொடர்ந்த கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

நிறுவனர் நாள் விழாவின் ஒரு பகுதியாக, பிஎஸ்ஜி நர்சிங் கல்லூரி மாணவிகளின் சிறப்பான சாதனைகளுக்காக “திறமையான பழைய மாணவர் விருது 2025” வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்கள்:

டாக்டர் செந்தில்குமார் டி.பேராசிரியர் மற்றும் முதல்வர், லூர்து நர்சிங் கல்லூரி, கண்ணூர், கேரளா.

டாக்டர் மீனா புத்துராஜ், உதவி பேராசிரியர், பொது சுகாதார நிறுவனம், பெங்களூரு.

ஜோஷி பிரபு, லெக்சரர், அடல்ட் நர்சிங், யூனிவர்சிட்டி ஆஃப் சால்போர்டு, மான்செஸ்டர், இங்கிலாந்து.

இந்த விழா ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, பிஎஸ்ஜி நர்சிங் கல்லூரியின் கல்வி மற்றும் சுகாதார சேவையில் காட்டிய சிறப்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது.

மேலும் படிக்க