• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் ‘புதிய இந்தியா’ விநாடி வினா நிகழ்வு

September 23, 2023 தண்டோரா குழு

பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ‘புதிய இந்தியா’விநாடி வினா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராத் சிங் தாக்கூர் பங்கேற்றார்.

இந்த நிகழ்வுக்கு பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் டி.கண்ணையன், முதல்வர் டி. பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற “புதிய இந்தியா” என்ற தலைப்பிலான விநாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது குறித்தும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராத் சிங் தாக்கூர் பரிசுகளை அளித்து கௌரவித்தார்.

மேலும் படிக்க