January 19, 2022
தண்டோரா குழு
கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செல்ஃபி வித் பிஎஸ்என்எல் என்ற நூதன முறையில் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் நடத்தினர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 G , 5 G அலைக் கற்றை அனுமதி வழங்கிட வலியுறுத்தி கோவையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இதுவரை 4ஜிக்கான தொழில்நுட்ப உதவியும், நிதிஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அதேபோல 5ஜி அனுமதி தற்போது பல தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பெற்ற பிள்ளையை தவிக்கவிடும் மத்திய அரசை கண்டித்தும், திட்டமிட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடைய செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் வித் செல்ஃபி என்கிற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நூதன போராட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமை வகித்தார்.