June 13, 2018
தண்டோரா குழு
நைஜீரியாவில் தந்தையின் கடைசி ஆசைப்படி அவரது உடலை மகன் ஒருவர் பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் அனம்பரா மாகாணத்தைச் சேர்ந்தவர் அலுபைக்.இவரது தந்தை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.அவர் இறப்பதற்கு முன் தனது மகனிடம் தனது உடலை பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
இதனால் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கி அதில் தனது தந்தையை அடக்கம் செய்துள்ளார்.இந்த பிஎம்டபிள்யூ காரின் விலை £66,000 அதாவது இந்திய மதிப்பின் படி 60 லட்சமாகும்.
உடலுடன் அடக்கம் செய்ய புதிய பிஎம்டபிள்யூ காரை பயன்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பான புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.