March 21, 2018
தண்டோரா குழு
பா.ஜ.க.வுடன் கூட்டணியோ ஆதரவோ இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தி.மு.க எம் எல்.ஏ கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அப்போது அவருக்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காவிரியில் நீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பாரதிய ஜனதாவுடன் கூட்டணியுமில்லை, ஆதரவும் இல்லை என கூறினார்.
அப்போது காவிரி விவகாரத்தில் உங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் என ஸ்டாலின் கூறினார்.இதற்கு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போது திமுக காவிரி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது? ஆந்திர பிரச்சினைக்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.
காவிரிக்காக மற்ற மாநிலங்கள் குரல் கொடுக்கவில்லை. நமக்காக எந்த மாநிலமும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.காவிரிக்காக நமது எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.