• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே லட்சியம் – வானதி சீனிவாசன்

August 26, 2020 தண்டோரா குழு

கோவை புலியகுளம் பகுதியில் தனியார் இ சேவை மையத்தை பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து
5 லட்சம் கோடிக்கு மேலாக தமிழகம் பெற்று இருக்கின்றது. கொரொனாவிற்கு 6600 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி இருக்கின்றது. தமிழகத்தில் பா.ஜ.கவின் நேரடி அரசை போல, இல்லை என்றாலும் எந்த வேறுபாடையும் காட்டாமல் திட்டங்களை வழங்கி இருக்கிறது.

தி.மு.க ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி திசை திரும்ப பார்க்கின்றார்.திமுக தலைவர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி,கிருஷ்ணர் சதுர்த்திக்கு வாழ்த்துகளை சொல்லவில்லை.
சிறுபான்மையினர் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின், நாகரிகமாக இந்த விழாக்களுக்கும் வாழ்த்துகளை சொல்லி இருக்க வேண்டும்.வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான அலை இருக்கும் என்பதை பா.ஜ.க கூற விரும்புகின்றது.

ரஜினியின் அரசியல் பயணமே ஆன்மீக பயணம்.இதற்கு முன்பாக அவர் வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றார்.ஆனால்
பிற மதங்களை இழிவுபடுத்துவர் அல்ல ரஜினிகாந்த் அதிமுக கூட்டணி , திமுக கூட்டணி என்பது பொலிட்டிக்கல் அரேஜ்மென்ட் மட்டுமே.
பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே லட்சியம்கூட்டணி பிரேலதா விஜயகாந்த் அவருடைய கட்சியின் ஒரு நோக்கத்தை சொல்லி இருக்கலாம்.தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது வரை தொடர்ந்து வருகின்றது. அதில்எந்த மாற்றமும் இல்லை
தேர்தல் களம் நெருங்க,நெருங்க கூட்டணி செயல்பாடுகளில் கட்சிகள் விருப்பங்களை சொல்வது வாடிக்கையான விஷயம்தான்.

பா.ஜ.க தலைமையில் தனியாக ஒரு அணி உருவாகுமா என்பது,தேர்தல் நெருங்கும் போது அதற்கான தகவல் வரும் எங்களுக்கு ஆர்வம் இருக்கின்றது. சூழல் மாறிக்கொண்டு இருப்பதை உணர்கின்றோம்.செல்வாக்கு இல்லாத பகுதிகளில் இப்போது செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. தேர்தலுக்குள்ளாக நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதை சொல்லி வருகின்றோம். அதை அடையும் வரை கூட்டணி இருக்கும் என்றார்.

மேலும் படிக்க