• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.க சார்பில் மாவட்ட அளவிலான 5எஸ் கால்பந்து போட்டி

June 26, 2023 தண்டோரா குழு

பா.ஜ.க கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்திறன் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான 5 எஸ் கால்பந்து போட்டி கோவை காளப்பட்டி சாலையில் உள்ள யுகா ஸ்போர்ட்ஸில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை வகித்தார்.பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி போட்டிகளை தொடங்கி வைத்தார்.மாவட்ட நிர்வாகிகள் பிரனேஷ் , குணா,தங்கவேல், கிஷோர், ராஜசேகர், சாரதி, சங்கர்,சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே செல்வகுமார்,இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ராமர் விஜயன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜேஷ், மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகிய கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ரொக்க பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டது.இதில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ.6 ஆயிரமும்,3ம் பரிசாக ரூ.4 ஆயிரமும், சிறந்த வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க