• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பா.ஜ.கவுடன் கூட்டணியா ? பன்னீர்செல்வம் அறிவிப்பு

May 20, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிளவுபட்டது.இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

சசிகலா அணியினர் அதிமுக அம்மா அணி என்ற பெயரிலும், ஓ.பி.எஸ்., அணியினர் அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பாஜக-வுடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து சில நிமிடங்களில் மற்றொரு டுவிட்டில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவு செய்வோம் என்ற அர்த்தத்தில் தான் முதல் செய்தி வெளியிடப்பட்டது எனக்கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க