November 12, 2021
தண்டோரா குழு
கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
கோவை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு மொத்தம் 6618 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
இதில் தற்போது வரை 3332 இயந்திரங்கள் வந்துள்ளது.இதில் 5 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் பெல் நிறுவன பொறியாளர்கள் 10 நபர்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை பரிசோதனை செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவினை மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சி தேர்தல்) சந்தானம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.