January 20, 2021
தண்டோரா குழு
கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல், காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட காருண்யா சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைக்கு பின்னரே வருமான வரி குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.