• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் கைது

April 4, 2017 தண்டோரா குழு

வால்மீகி குறித்து தவறாக பேசியதாக இந்தி நடிகை ராக்கி சாவந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

இந்தி முன்னணி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.அப்போது, வால்மீகி முனிவர் பற்றி அவதூறான சில கருத்துக்களை கூறியுள்ளார். இது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இதில் ராக்கி சாவந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், இதனை கண்டு கொள்ளாமல் இருந்த ராக்கி சாவந்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், லூதியானா போலீசார் தங்களிடம் சரணடைந்து விடுமாறு பலமுறை ராக்கி சாவந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், அவர் இதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் நடிகை ராக்கி சாவந்தை இன்று மும்பையில் கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க