May 17, 2018
தண்டோரா குழு
அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய டாக்டர் லார்ரி நச்சாரி மீது தொடரப்பட்ட வழக்கில் மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் லார்ரி நஸ்சார். இவருடைய ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு அதிக வீராங்கனைகள் வருவதுண்டு. இந்நிலையில், இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் பாலியல் தொடர்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இவரால் பாதிக்கப்பட்டதாக சுமார் 332 பெண்கள் புகார் அளித்தனர்.இதை தொடர்ந்து பல்கலைகழகம் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், மிக்சிகன் பல்கலைக்கழகம் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்பியது.
ஜிம்னாஸ்டிக் ஆசிரியர் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்குவதாக ஒப்புதல் அளித்தார்.