• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் குற்றங்களை தடுப்பதில், கோவை சரகம் தமிழகத்தில் முன்னணியில் உள்ளது – டி.ஐ.ஜி., முத்துசாமி

September 19, 2022 தண்டோரா குழு

கொரோனா தொற்று காலத்தில் சிறப்பான பணியாற்றியமைக்கான ரோட்டரி சங்க விருது, கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.

கோவை வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் பிரபு, செயலாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் விருது வழங்கினர்.

விருது பெற்றுக்கொண்டகோவை சரக டி.ஐ.ஜி.முத்துசாமி பேசியதாவது,

ரோட்டரி சங்கம் வழங்கிய இந்த விருது,கோவை சரகத்துக்கு கிடைத்த அங்கீகாரம். நான்கு எஸ்.பி.,க்கள், ஆயிரக்கணக்கான போலீசாரின் பணிக்கு கிடைத்த பாராட்டாக இதை கருதுகிறேன்.கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணியை காட்டிலும், ‘போக்சோ’ வழக்குகளில் கோவை சரக போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை சரகத்தில் தான், 75 போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதுவும், 20 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு 40 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.குற்ற வழக்குகளில் சிக்கிய 50 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதில், கோவை சரகம் தமிழகத்தில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு டி.ஐ.ஜி., பேசினார்.

மேலும் படிக்க