• Download mobile app
24 Jan 2026, SaturdayEdition - 3636
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலிசிதாரர்களுக்கு சேமிப்பை எளிதாக்கும் ‘பிரீமியம் ஆப்செட்’ வசதி: டாடா ஏஐஏ லைப் அறிமுகம்

January 24, 2026 தண்டோரா குழு

நம்மில் பெரும்பாலானோரிடம் எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால், அதற்கான நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது பல நேரங்களில் கடினமாக இருக்கிறது.

அதிகரிக்கும் குடும்பச் செலவுகள், மாறிவரும் முன்னுரிமைகள் மற்றும் ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்த வேண்டிய அழுத்தம் ஆகியவை நீண்ட காலத் திட்டங்களைத் தொடரத் தடையாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு சேமிப்பை எளிதாக்கவும்,அதை அனைவரும் செய்யக்கூடிய வகையிலும், டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் தனது ‘பார்ச்சூன் கேரண்டி சுப்ரீம்’ என்ற நீண்ட கால சேமிப்புத் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.

இது நிதிச் சுமையை குறைப்பதோடு, உத்தரவாதமான வருமானத்தையும் அளிக்கிறது.இந்த மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் டாடா ஏஐஏ-வின் தனித்துவமான ‘பிரீமியம் ஆப்செட்’ வசதி ஆகும். இந்த வசதியின் கீழ், 12 ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டிய திட்டத்தில், வாடிக்கையாளர்கள் முதல் 6 ஆண்டுகள் மட்டும் தங்கள் கையில் இருந்து பிரீமியம் செலுத்தினால் போதும். மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கான பிரீமியத்தை, இந்தத் திட்டத்தின் மூலம் டாடா ஏஐஏ வழங்கும் வருமானத்தைக் கொண்டே ஈடுசெய்து கொள்ளலாம்.

இந்த ‘ஆப்செட்’ முறையினால், வாடிக்கையாளர்கள் முழுக் காலத்திற்கும் பிரீமியம் செலுத்தும் அழுத்தம் இல்லாமல், நீண்ட காலத்திற்குத் தங்கள் முதலீட்டைத் தொடர முடியும். தங்கள் கையில் இருந்து செலுத்தும் தொகையைக் குறைப்பதன் மூலம், இந்தத் திட்டம் சேமிப்பை எளிதாக்குகிறது. குறிப்பாக, விலையேற்றம் மற்றும் வரிகள் அதிகம் உள்ள இன்றைய சூழலில், நீண்ட கால நிதிக் கடமைகள் கடினமாகத் தெரியும் போது, இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

இது குறித்து டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் தலைமை விநியோக அதிகாரி ஜீலானி பாஷா கூறுகையில்,

நம்மில் பலரும் நீண்ட காலத்திற்குச் சேமிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதிகரிக்கும் செலவுகளால் தொடர்ந்து பிரீமியம் செலுத்த முடியுமா என்று கவலைப்படுகிறார்கள். ‘பிரீமியம் ஆப்செட்’ வசதி மற்றும் கணிக்கக்கூடிய வருமான பலன்கள் மூலம், ‘பார்ச்சூன் கேரண்டி சுப்ரீம்’ திட்டம் நீண்ட காலச் சேமிப்பை மிகவும் எளிதாக மாற்றுகிறது. இது பாலிசிதாரர்கள் விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தங்கள் நிதிக் குறிக்கோள்களை அடையவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும் என்று தெரிவித்தார்.

‘பார்ச்சூன் கேரண்டி சுப்ரீம்’ திட்டம், வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதமான வருமானம் மற்றும் இதர பலன்களை வழங்குகிறது. இதில் 6 சதவீதத்க்கும் அதிகமான கவர்ச்சிகரமான ‘இன்டர்னல் ரேட் ஆப் ரிட்டர்ன்’ கிடைக்கிறது. ‘பவர் ஆப் 6’ என்று அழைக்கப்படும் இந்த அம்சம், எதிர்காலத்தில் நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பைத் தேடும் தனிநபர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுக்காலத் தேவைகள், குடும்பத் தேவைகள் அல்லது பிற்கால வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு இது பேருதவியாக இருக்கும்.

இது 6 சதவீத வருவாயை உத்தரவாதமாக அளிக்கிறது. குழந்தைகளின் கல்வி, ஓய்வுக்காலம் மற்றும் வருமானப் பாதுகாப்பு போன்ற வாழ்க்கைக் குறிக்கோள்களைத் திட்டமிடுபவர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க