• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை பரிதாப சாவு

December 25, 2019

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த ரயில் யானை மீது மோதியதில், யானை பரிதாபமாக பலியானது. இதுகுறித்து ரயில் பைலட் பாலக்காடு ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் யானையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சமீப காலமாக யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.

இந்த சூழலில், வனப்பகுதியை கடக்கும் போது ரயில்கள் மித வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டும் அதனை கடைபிடிப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க