• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த சிறுவர்களுக்கான மாறுவேட நிகழ்ச்சி

November 9, 2019

கோவையில் சிறுவர்களுக்கான மாறுவேட நிகழ்ச்சியில் குழைந்தைகள் பல்வேறு வேடங்களை அணிந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உலக முழுவதும் தற்போது குழைந்தைகளிடயே மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை செல்போன் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் மூலம் சிறுவர்கள் அதிகம் மூழ்கி உள்ளதால் இதனிடையே இருந்து குழந்தைகளை வெளியேற்றுவதற்காக,அவர்களில் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஏஎல்ஜி மெட்ரிக் பள்ளியில் 5வயதுக்கு உற்பட்ட மழலையருக்கான மாறுவேட நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு வேடங்களை அணிந்து பாடல்கள் மற்றும் கதை சொல்லும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் காவல் துறை வேடம், ராஜா வேடம், விவசாயிகள் வேடம், இயற்கை சார்ந்த கிளிகள் போன்ற வேடங்கள் அணிந்து இருந்தது பாரவையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வெற்றி பெற்ற குழைந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

மேலும் படிக்க