• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ‘லலித் கலாசேத்ரா மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

February 10, 2020 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் லலித் கலாசேத்திராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் லலித் கலாசேத்ராவின் மாணவிகளான தனுஸ்ரீ, பிரகதி சுரேஷ் மற்றும் ரசிகா ரஞ்சினி ஆகியோரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் வரவேற்புரை லலித் கலாசேத்ராவின் நிர்வாக இயக்குனர் ரவிராஜ் வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி கலிகாவிரி கல்லூரியின் நடன துறையின் பேராசிரியர் சரல் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

கோவையின் பெருமையில் லலித் கலாசேத்திரா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பரதநாட்டியத்தில் பல்வேறு திறமை மிக்க மாணவர்களை உருவாகி வருவதாகவும், இந்த அரங்கேற்றத்தில் போலவே இன்னும் பல்வேறு அரங்கேற்றங்கள், வெள்ளி விழாக்கள், பொன் விழாக்களை கொண்டாடியும் லலித் கலாசேத்திரா மென்மேலும் வளரவேண்டும் என்றும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து பரதநாட்டியம் அரங்கேற்றிய மாணவிகளுக்கு பெற்றோர்களுடன் விருதுகளை வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டிய கலைமணி விஜயலட்சுமி பரமேஸ்வரன், சுமித்ரா தினேஷ், வினைய பாலமுருகன், நிர்மலா ரவிராஜ் மற்றும் லலித் கலாசேத்திரா நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க