• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்திய எல்.ஜி.பி கோப்பையின் 2வது சுற்று கார் பந்தய போட்டி

November 22, 2021 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீடு வே பந்தய பாதையில் நடைபெற்ற எல்.ஜி.பி கோப்பையின் 2வது சுற்று கார் பந்தய போட்டியில், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

கோவை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் ஜே.கே.டயர்ஸ் சார்பில் பராமரிக்கப்படும் கரி மோட்டார் ஸ்பீடு வே அமைந்துள்ளது. நொய்டா, சென்னை போன்ற நகரங்களுக்கு பிறகு இந்தியாவில் பார்முலா 4 அளவிலான பந்தயங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக எல்.ஜி.பி கோப்பையில் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றது. ஜே.கே.டயர்ஸ், எல்.ஜி.பி கோப்பையின் இரண்டாவது மற்றும் 3வது போட்டிகள் மற்றும் ஜே.கே டயர்ஸ் நோவிஸ் கோப்பையின் 2வது மற்றும் 3வது போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் பங்கேற்கும் ராயல் என்பீல்ட் காண்டினண்டல் கோப்பையின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் எல்.ஜி.பி கோப்பையின் 2வது சுற்றில் திலிஜித் முதலிடத்தையும், டிஜில் ராவ் 2ம் இடத்தையும், சந்தீப்குமார் 3வது இடத்தையும் பிடித்து அசத்தினர். மூவரும் டார்க் டான் ரேசிங் குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் 3 வது போட்டியில் டிஜில் ராவ் முதலிடத்தையும், சந்தீப் குமார் 2ம் இடத்தையும், அஸ்வின் தத்தா 3வது இடத்தையும் பிடித்தனர்.

நோவிஸ் கோப்பையில் 2வது போட்டியில் எம்.ஸ்போர்ட்டின் ருகான் ஆல்வா முதலிடத்தையும், ஜேடன் பாரியட் இரண்டாம் இடத்தையும், டிடீஎஸ் ரேசிங்கின் ஜோயல் ஜோசப் 3வது இடத்தையும் பிடித்தனர். 3வது போட்டியில் ருகான் ஆல்வா முதலிடத்தையும், ஜேடன் பாரியட் இரண்டாம் இடத்தையும், கவுரவ் கோச்சார் 3வது இடத்தியும் பிடித்தனர்.

ராயல் என்பீல்ட் பைக் போட்டியில் திருச்சூரை சேர்ந்த அன்பல் அக்தார் முதலிடத்தையும், ஆல்வின் சேவியர் 2ம் இடத்தையும், கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் 3ம் இடத்தையும் பிடித்தனர்.பந்தய மைதானத்தில் கார்களும், இருசக்கர வாகனங்களும் உருமல் சத்தத்துடன் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க