• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பார்வையற்ற இயக்குநர் இயக்கத்தில் உருவான கொரோனா விழிப்புணர்வு குறும்படம் !

May 19, 2020 தண்டோரா குழு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்திரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாடல்கள், விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கி வருக்கின்றனர்.

அந்தவகையில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து
கொரோனா ஊரடங்கால் நாம் பெற்றது என்ன இந்த உலகம் இழந்து என்ன என்பதை
மையமாக வைத்து குறும்படத்தை இயக்கியுள்ளார். இக்குறும்படத்தின் சிறப்பே இதன் இயக்குநருக்கு கண் பார்வை தெரியாது.

இக்குறும்பத்தை இயக்கிய R.J.குமார் கூறுகையில்,

நான் சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். எனக்கு பிறவியிலிருந்தே கண் பார்வை தெரியாது. எனக்கு சிறுவயதிலிருந்தே பலகுரல் திறமை இருந்தது. 200 குரலில் பேசுவேன்.எனக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது.இதற்காக நான் பல முயற்சிகள் சிறுவயதிலிருந்தே செய்து வருகிறேன்.2014ம் ஆண்டு இயக்குனர் பாலுமகேந்திரா அவரிடம் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி இயக்குனர் ஆக முடியுமா என்று கேட்டேன்.அதற்கு அவர் உன் எண்ணங்களை பிரதிபலிக்க
கூடிய ஒளிப்பதிவாளர் கிடைத்தால் நீயும் ஒரு இயக்குனர் ஆகலாம் என்று சொன்னார். கிட்டதட்ட 3 மாதங்கள் அவரிடம் இயக்குனர் ஆவதற்கான பயிற்சி பெற்றேன். பிறகு 5 வருட போராட்டத்திற்கு பிறகு ‘இதுவும் சாத்தியம்’ என்ற குறும்மபடத்தை இயக்கினேன்.அந்த குறும்படம் பார்வையற்றவர்களுக்கும் கனவு வரும் என்பதை மையக் கருத்தாக கொண்டதாகும்.தற்போது அலங்கோலம் என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறேன்.இந்த குறும்படத்தில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் படும் அவலங்களை கொண்டு இயக்கி இருக்கிறேன்.இந்த கொரோனா ஊரடங்கால் நாம் பெற்றது என்ன இந்த உலகம் இழந்து என்ன என்பதை உணர்த்தி இருக்கிறேன். இந்த குறும்படம் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்த கும்படத்தின் தயாரிப்பாளர் வேலுரை சேர்ந்த R.சதிஷ் குமார் இவரும் ஒரு பார்வையற்ற மாற்றுதிறனாளிதான். இந்த அலங்கோலம் குறம்படத்தின்
ஒளிப்பதிவாளர் வினோத் ஜகன் நான் சொன்ன காட்சிகளை சிறப்பாக எடுத்துள்ளார்.பிறகு இசையமைப்பாளர் GODSUN இவரும் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளிதான். இந்த குறம்படத்தை வெளியிட்ட HEADWAY FOUNDATION ராகவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இவரும் ஒரு மாற்றுத்திறனாளி தான். இந்த குறும்படத்தின் கதைகளத்திற்கு உதவிய பால்நிலவன்(Address centre) நன்றி சொல்ல விரும்புகிறேன்.

எனக்கு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.இதுவரை எடுக்கபடாத கதைகளம் என்னிடம் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் யாராக இருந்தாலும் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு அளியுங்கள் இது எங்களுக்கு உதவியாக இருக்கும்.ஊடகங்கள் எங்களுக்கான மேடையை அமைத்து தரவேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறன்.என்னுடைய கடைசி ஆசை ஒரு படத்தை இயக்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுனணயாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் R.சதீஷ் குமார் கூறும்போது,

நான் ஒரு நடிகரும் கூட பல வருடங்கள் நாங்கள் வாய்ப்பை தேடி அலைந்தோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் நாங்களே வாய்ப்புகளை உருவாக்கினோம். அந்த வகையில்தான் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளேன். எங்களைப் போன்ற திறமையுள்ள மாற்றுத்திறனாளிகள் நிறைய பேர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கான வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நாங்கள் எங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவோம்.இந்த குறும்படத்தில் பணியாற்றிய இயக்குனர் R.J.KUMAR , ஒளிப்பதிவாளர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.கண்டிப்பாக எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் எங்களுடைய திறமைகளை இந்த உலகத்திற்கு காட்டுவோம் என்று நம்புகிறோம்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ஜெகன் கூறும்போது,

இந்த குறும்படத்தின் இயக்குனர் R.J.குமார் அவருடைய திறமையை கண்டு நான் வியந்துள்ளேன். ஏனென்றால் எந்தெந்த இடத்தில் என்னென்ன காட்சிகளை படமாக்க வேண்டும் என்று அவர் சிறப்பாக கூறினார். அதைக் கண்டு நான் வியந்தேன். கண் தெரிந்தவர்களுக்கு நிகராக அவர் பணியாற்றி இருக்கிறார். மேலும் அவருக்கு பல வெற்றிகள் குவியும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க