• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்வையற்றவர்களுக்காக தொழில் வளர்ச்சிக்கு உதவி மற்றும் உணவு வழங்கும் விழா

August 5, 2022 தண்டோரா குழு

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம்,கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம்,கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் FAIRA ஆகியோர் சார்பாக, பார்வையற்றவர்களுக்காக தொழில் வளர்ச்சிக்கு உதவி மற்றும் உணவு வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-C ,நேரு நகர் அரிமா சங்கம்,கலாம் அறக்கட்டளை மற்றும் FAIRA அமைப்பினர் ஆகியோர் இணைந்து தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கண் பார்வையற்றோர்களுக கு சுயதொழில் உதவி மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள,தேசிய தேசிய பார்வையற்றோர் இணையம் வளாகத்தில் நடைபெற்றது.

பன்னாட்டு அரிமா சங்கம் 324 C,ன் மக்கள் தொடர்பு மாவட்ட தலைவர், மற்றும் வட்டாரத் தலைவர், கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர், FAIRA அமைப்பின்,தேசிய துணைத் தலைவர்,என் நிலம் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்,தேஜஸ் அசோசியேட்ஸ் உரிமையாளர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கும்,அரிமா செந்தில் குமார் தலைமையில் மகிழ்வித்து மகிழ் எனும் தலைப்பில், நடைபெற்ற விழாவில், நேருநகர் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் மோகன்ராஜ்,சோபன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.மு.தமிழினியன் என்ற முகமது ஜியாவுதீன்,கோவை மாநகர காவல் துறை ஆயுதப்படை பிரிவு உதவி ஆணையாளர் சேகர், அரிமா சங்கம் 324 சி மாவட்ட ஆளுநர் ராம்குமார், FAIRA அமைப்பின்,தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து, ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தனர்.

முன்னதாக கொடி வணக்கம் நடைபெற்றது.இதில் தேசிய நலன் காக்க அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 சி பல்வேறு நிலை நிர்வாகிகள் பொன்னுசாமி,செல்வராஜன்,. ஜோசப்,:ராஜ்மோகன்,ராமலிங்கம்,சுப்ரமணியன்,கனகராஜ்,முதல் துணை ஆளுநர் ஜெயசேகரன்,இரண்டாம் துணை ஆளுநர்,.நித்தியானந்தம், ராஜசேகரன், ராமசுப்ரமணியன்,SKT செல்வகுமார்,SKT கருப்புசாமி, பிரசன்ன மணிகண்டன், செல்வராஜ்,சூரி நந்தகோபால், மணிவண்ணன், ரோஜா,காளியப்பன்,சக்சஸ் சந்திரன், நந்தகுமார், ஸ்ரீராம்,. சரவணன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், கர்ணன்,சிவப்பிரகாசம்,சுரேஷ்குமார்,அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க