• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா – -பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் பங்கேற்பு

March 14, 2020

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுற்பக் கல்லூரியின் இரண்டு நாள் கலை திருவிழாவான ‘ZERO ‘G 2020’ எனும் ஆண்டு விழா வெகு விமர்சையாக துவங்கியது.

நிகழ்ச்சியில் பார்க் கல்விக் குழுமம் முதன்மை செயல் அதிகாரி அனுஷா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகேன் ராவ் கலந்துகொண்டு மாணவர்கள் விருப்பிய துறையில் முழு முயற்சி கொண்டு உழைத்து வெற்றி பெற வாழ்த்தினார்.

கவுரவ விருதினராக கலந்து கொண்ட சினிமா நடிகர் மற்றும் கோவை டங்காமாரி புகழ் பிரவீன் நந்தகோபால் சினிமா துறையில் பணிபுரிய யாருக்காவது விருப்பமிருந்தால் அவர்களுக்கு வழிகாட்ட ஆர்வத்துடன் இருப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து, கல்லூரியில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டது.

மேலும், முதன்மை செயல் அதிகாரி அனுஷா முன்னின்று கூடியிருந்த அனைவரையும் இணைத்து பெண்களுக்காக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். அதில் பெண்கள் கல்விக்காக ஒத்துழைப்போம் ஏனெனில் அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பெண்கள் தலைமையேற்று நிறுவகிக்கும் பொறுப்புகளை போற்றுவோம், ஆதரிப்போம், இன்றைய தலைமுறைக்கு நமது நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெண்களின் வரலாற்றை எடுத்து கூறுவோம். பெண்களின் உடல் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்போம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு குரல் கொடுப்போம். என்று எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஆரியர்கள் மற்றும் மாணவர்களை உற்சாகப்படுத்த சிறப்பு விருந்தினர் முகேன் ராவ் மற்றும் பிரவீனின் ஆடல், பாடல் அனைவரையும் கவர்ந்தது.

இறுதியாக, கோவையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை விழாவில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க