• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க் கல்வி குழும கல்லூரியில் செய்தி வாசிப்பாளர் பயிற்சி மையம் துவக்கம்

December 27, 2022 தண்டோரா குழு

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழும கல்லூரியில் செய்தி வாசிப்பாளர்களுக்கான பயிற்சிக் மையத்தை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பிரபுதாசன் முன்னிலை வகித்தார்.

பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.வி.ரவி சிறப்புரையாற்றினார்.முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், அனைத்துத் துறையின் பயிற்சி கல்லூரிகளை கோவை துவங்கி கோவை மாவட்டத்தை கல்விக்கான இலக்காக ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, செய்தி வாசிப்பாளர்,நிருபர், துணை எடிட்டிங், கைபேசி ஜர்னலிசம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஒப்பனைக்கான பயிற்சி கல்லூரியை கோவையில் துவங்கியதற்கு பாராட்டை தெரிவித்தார்.

பயிற்சி கல்லூரியின் கோவை கிளை ஒருங்கிணைப்பாளர் முகமத் இஸ்மாயில் வரவேற்றார்.கோவை கிளைத் தலைவர் பொற்கொடி செல்வராஜ் நன்றி கூறினார்.

மேலும் படிக்க