February 23, 2018
தண்டோரா குழு
மும்பையில் கண்ணில் படும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் சைக்கோ நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் உள்ள டர்பே ரயில் நிலையத்தில் 21 வயது இளம் பெண் பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த வாலிபர் அப்பெண்னை மடக்கிபிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் சிசிடி கேமரா உதவியுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதே போல முத்தம் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.