August 31, 2021
தண்டோரா குழு
பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் 2 வது முறையாக பதக்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு அசத்தியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உயரம் தாண்டுதலில் இந்தியா 2 பதக்கங்களை வென்றது.
டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன்.1.83 மீ. உயரம் தாண்டி பீகாரை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.அமெரிக்க வீரர் கீரிவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளி வென்றார் மாரியப்பன்.
2016 ரியோ பாராலிம்பிக்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக டோக்யோ பாராலிம்பிக்கிலும் பதக்கம் வென்று தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.