• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் கால்நடைகளில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு !

February 9, 2024 தண்டோரா குழு

கிணத்துக்கடவு,அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டத்தின் ( RAWE ) கீழ் குருநல்லிபாளையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகில் விழிப்புணர்வு செயல்முறை விளக்கங்களை அளித்தனர்.

இந்தநிகழ்வில் பார்வதி எஸ்,ஐஃபா அம்ரின்,தேவநந்தனா பினுராஜ்,கிருஷ்ணா, நட்சத்திரா,ஜெயஸ்ரீ, வரதா அருண், அபிஜித் ராபி,ஆதிரா ராஜன்,ஆயிஷா ஷபானா, ஸ்ரீகாந்த், நேஹா மாதவன் , அக்ஷத் கே அணில், தீட்சண்யா பி , சோனா சரஸ்வதி ஆகிய மாணவ மாணவிகள் பங்கு வகித்தனர்.

அதன் பகுதியாக விதை முதன்மைபடுத்துதல் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும் திறனை பெறும் என்று கூறி அதை செயல்முறை மூலம் விளக்கினர்.பின்னர்,பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவத்தினைக் கூறி அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் ஊட்டச்சத்து பயன்களை குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

மேலும் கால்நடைகளில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை கொண்டு கண்டறிவது குறித்து விளக்கங்களை அளித்தனர்.பின்னர்,கால்நடைகளில் செய்ய வேண்டிய குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டிய நேரத்தைக் குறித்தும் விரிவாக விளக்கினர்.இறுதியாக , அங்கு காளான் வளர்ப்பு விவசாயம் குறைவாக இருப்பதால் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை கூறி அதை செய்வதற்காக தேவைப்படும் அனைத்து யோசனைகளையும் குறித்து செயல்முறை மூலம் விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில்,விவசாயிகள் பங்கேற்று அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.கல்லூரி முதல்வர் சுதீஷ் மணலில், பேராசிரியர்கள் சுரேஷ்குமார் , முருகஸ்ரீதேவி,காமேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வழிக்காட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க