June 10, 2022
தண்டோரா குழு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் தேர்விற்கான விண்ணப்ப படிவங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவை பாரதியார் பல்கலைகழகம் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் 13ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்ப படிவமானது பாரதியார் பல்கலைக்கழக இணைய தளமான examapplication.b-u.ac.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மேற்குறிபிட்ட இணையதள முகவரியில் தங்களின் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் காசோலைகள் பரிசீலனைக்கு ஏற்றுகொள்ளப்படமாட்டாது. மேலும், தேர்வுகால அட்டவணை www.b.u.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியில் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.