May 7, 2021
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக பாரதியார் பல்கலைகழக ஊழியர்களுக்கு மூலிகை முக கவசங்கள் மற்றும் ஆர்சாணிக் ஆல்பம் மாத்திரைகளை துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் வழங்கினார்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநல பணி திட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைகழக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு முக கவசங்கள், மற்றும் ஆர்சாணிக் ஆல்பம் மாத்திரைகளை துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் வழங்கினார்.
பல்கலைகழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அண்ணாதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் பல்கலைக்கழக பதிவாளர் முருகன்,ஆட்சிகுழு உறுப்பினர் ரூபா குணசீலன்மற்றும் பேராசிரியர்கள் மணிமேகலன், வசந்த், சுரேஷ்பாபு, முருகவேல்,சுரேஷ்குமார்,சிங்கார வேல்,பாலசந்தர்,அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.