February 21, 2018
தண்டோரா குழு
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோயை சேர்ந்தவர் சோனல்லால் ,விவசாயியான இவர் கடந்த சனிகிழமை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம்பக்கதினர் மீட்டு சமுதாய சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், சோனல்லாலுக்கு நினைவு திரும்பியவுடன் மருத்துவர்கள் என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறுமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர் மருத்துவர்களிடம் “என்னை பாம்பு கடித்து விட்டது அதை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த பாம்பின் தலையை கடித்து துப்பியதாக கூறினார்”.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில்,
நான் இதுவரை இப்படி ஒரு கேஸை பார்த்ததில்லை. பாம்பைக் கடித்த பின்பும் அவர் நன்றாக இருக்கிறார். நாங்கள் பாம்பு கடித்த இடத்தை தேடினோம் ஆனால் அவரது உடம்பில் பாம்பி கடித்ததற்கான அடையாளமே இல்லை. ஒருவேலை அவர் பாம்பின் தலையை கடித்து துப்புவதற்கு பதிலாக அவற்றை மென்றிருப்பார் அதனால் தான் பாம்பின் விஷம் அவரு உடம்புக்குள் சென்றிருக்ககூடும் என்றும் ஒரு சாதாரன நிலையில் உள்ள மனிதன் இதை செய்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.