• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாம்பு வளர்த்ததாக அஜித் வீட்டில் அதிகாரிகள் சோதனையா?

December 18, 2019

நடிகர் அஜித் வீட்டில் சோதனை நடந்தது உண்மையில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜீத்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா சென்னை மதுரவாயலில் உள்ள தன் வீட்டில் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளர்ப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தியதாகவும் பின்பு நடிகர் அஜித்குமாரின் பழைய வீடான திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சென்னை வனத்துறை தலைமையிட வனசரகர் மோகன் அளித்த பேட்டியில், அஜித் வீட்டில் சோதனை நடந்ததாக கூறுவது பொய்யான செய்தி என்றும், அவரது மேனேஜரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில்,

என்னுடைய வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது அடிப்படை ஆதாரமற்றது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க