May 26, 2018
தண்டோரா குழு
வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க கோயில் யானைக்கு இந்து அறநிலையத்துறை நூதன முறையில் பாதுகாப்பு அளித்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திருக்கோயிலில் கோயில் யானை வெயிலின் தாக்கத்தினால் தவித்து வந்தது. அதற்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை சில வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதில் யானை குளியல் போட ஷவர்யும் அமைத்து யானையின் தலைமுடியை ‘பாப் கட்டிங்’ செய்யப்பட்டுள்ளது.
தினமும் அந்த யானை ஷவரில் குளியல் போட்டு தன் உஷ்ணத்தைத் வெயிலில் இருந்து தாக்குப்பிடிக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் அந்த யானை தினமும் ஷவரில் குளிப்பதைப் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.