• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி IMMK கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

December 6, 2022 தண்டோரா குழு

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியி்ல் உள்ள வஹாப் பெட்ரோல் பங்க் அருகே ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 6ம்தேதி, அயொத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூர் வஹாப் பெட்ரோல் பங்க் முன்பாக, வழிபாட்டு உரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம், நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தை இவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பெரோஸ் கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்பாட்டத்தில், திருப்பூர் மாவட்ட தலைவர் பஷீர், ஈரோடு மாவட்ட தலைவர் ஜாபர் அலி, சேலம் மாவட்ட தலைவர் நிஷார் நாமக்கல் மாவட்ட தலைவர் பாஷா என பலரும் முன்னிலை வகித்தனர்,

இந்த ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முனைவர் சுந்தரவள்ளி கூறும் போது

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தின நினைவை கொண்டாடும் இந்த நாள் தான், அன்னல் அம்பேத்கரின் நினைவு தினமும் கூட, பாசிசத்திற்க்கு எதிராக களமாடிய இரண்டு தரப்பு ஒன்று, பட்டியலிடன மக்களின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை ஒன்றும் இல்லாமல் காலி செய்வது, இரண்டாவது, நிலத்திற்காக நீண்ட நெடிய பழமை வாய்ந்த 400 ஆண்டுகால பழமையை காலி செய்வது, இந்த இரண்டு திட்டத்தையும் திட்டமிட்டு அமுல் படுத்தி வருகின்றது காவி கும்பல், நீதி மன்றத்தை கையில் வைத்து கொண்டு சட்டத்தை கையில் வைத்து கொண்டு இந்த செயலை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்திய சமூகம், அரசியல் சாசனத்தை காக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ள பட்டுள்ளொம் அரசியல் சாசன சட்டத்தின் கீழ், இந்திய மக்களை அனைத்து மதமெ சார்ந்த ஒன்று திரட்டி, பாசிசத்திற்க்கு எதிராக காவிகளுக்கு எதிராக, களமாட வேண்டிய அவசியத்தை முன்வைத்து இந்த ஆர்பாட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க