• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை 2 பேர் பலி

March 9, 2017 தண்டோரா குழு

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தின் பட்கம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை (மார்ச் 9) நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து மத்திய ரிசர்வ போலீஸ் படை வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு புல்வாமா பகுதியில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

அங்கு பதுங்கியிருந்த 2 முதல் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

“உயிரிழந்த தீவிரவாதிகள் ஜஹாங்கீர் கனி மற்றும் முஹம்மத் ஷஃபி என்கிற சேர் குஜ்ரி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உள்ளூர் காவல்துறை அதிகாரியைக் கொலை செய்த சம்பவத்தில் கனை சம்பந்தப்பட்டுள்ளான். உயிரிழந்த இருவரும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” என்று மூத்த மத்திய ரிசர்வ போலீஸ் படை அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், சண்டை நடந்துகொண்டிருக்கும் பட்கம்போரா கிராமத்தின் அருகில் உள்ள ரயில் பாதை வழியாக பனிஹல் பாரமுல்லா ரயில் செல்வதால், அதனுடைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க