• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்

June 28, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்ட இந்த மலை ரயிலில் பயணித்து, இயற்கை அழகை பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில் 130க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. கல்லார் ரயில் நிலையத்தை சென்றடைந்த போது, ரயில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே நின்றது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன.
எனினும், சீரமைக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யபடுவதாக அறிவிக்கபட்டது.

மேலும் படிக்க