• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறலை சொல்லும் ‘தீர்வு காணும் வரை’ குறும்படம் !

March 9, 2020 தண்டோரா குழு

பிறப்பது ஒரு இடம், பயணிப்பது மற்றொரு இடம் என்பதனாலோ நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறார்கள். இப்படி புன்னிய நதிகளாக போற்றப்படும் நம் நாட்டில் பெண்களின் கதியோ கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை நடக்கிறது. ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சனை மரணம் நிகழ்கிறது. அப்படியெனில் ஒரு நாளில் 24 மணி நேரமும் எத்தனை இடர்பாடுகள் பெண்களுக்கு. பெண் கருக் கொலைகள், பெண் சிசுக் கொலைகள், பாலியல் ரீதியான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் தாழ்த்தப்பட்ட-பழங்குடி பெண்களை தாக்குகின்ற வன்முறைகள் என தினந்தோறும் பெண்கள் ஆண்களால் வேட்டையாடப்படுகின்றனர்.

அதிலும் பெண்கள் மீதான சமீபத்திய வன்கொடுமைகளும், தாக்குதல்களும் மிகவும் கொடூரமாக அரங்கேறியுள்ளன.டெல்லி மருத்துவ மாணவியை ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூமாக கொலை செய்த சம்பவத்தை இன்றளவு நாம் மறந்திருக்க மாட்டோம். அதைபோல் சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான நடந்த பாலியல் வன்கொடுமையை தமிழகத்தில் பலரை உறைய வைத்தது. கிட்டத்தட்ட அந்த சம்பவத்தை மையாக வைத்து உருவான குறும்படம் தான் ‘தீர்வு காணும் வரை’ நிக்கில் ராகவ் என்பவர் இக்குறும்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கீர்த்தனா என்பவர் தயாரித்த இந்த குறும்படம் கடந்த மார்ச் 7ம் தேதி யூடியூபில் வெளியிடபட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நான்கு கொடூர குணம் கொண்ட இளைஞர் சாதிக்க துடிக்க நினைத்த ஒரு பெண்ணை ஏமாத்தி தன் இல்லத்திற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் அவமானத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறாள். இருப்பினும் தன்னை தானே சமாதானப்படுத்தி வெளியே செல்லும் அப்பெண்னை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை இயக்குனர் அருமையாக காட்சிபடுத்தி இருக்கிறார். குற்றவாளிகள் யார் என்று தெரிந்த பின்பு நீதிமன்றம் தண்டனை வழங்கும் போது பாதிக்கப்பட்ட தன் தரப்பு நியாயத்தை கூறி தான் கூறும் தண்டணையை தான் குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று சொல்வது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் மனக்குமறல்கலை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலுக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா என்பதே க்ளைமேக் காட்சி.

இக்குறும்படத்தில் வருவதுபோல் பாதிக்கப்பட்ட பெண்னே குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்ற ஒரு சட்டம் வந்தால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கும் பெண்ணின் நடிப்பு அருமை. இயக்குனருக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க