December 9, 2020
தண்டோரா குழு
சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள இவர், சரவணன் மீனாட்சி என்ற தொடரில்முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா, இன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவின் மறைவு செய்தி கேட்ட ரசிகர்களும் திரை நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.