பாடல் பாடுவதில் ஆர்வமுடைய பல்வேறு துறை சார்ந்தவர்களுக்காக கோவையில் நடைபெற்ற பாடல் பயிற்சி பட்டறையில் பிரபல பின்னணி கலைஞர் எஸ்.என்.சுரேந்தர் கலந்து கொண்டார்.
தற்போதையை வேகமான உலகில் மருத்துவம், கணிணி துறை,சட்டம், காவல்துறை என பல்வேறு துறை சார்ந்த பணிகளில் பணியாற்றுபவர்கள் தங்களது மன அழுத்தங்களை போக்க தியானம், யோகா, மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங களுக்கு பிடித்த பாடல்களை பாடி தங்களது மனதிற்கு அமைதி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இது போன்ற சாதாரண பாடகர்களையும் முறையான பயிற்சி அளித்து எளிமையாக பாடும்படி பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகளை கோவையை சேர்ந்த ஸ்டுடியோ மியூசிக் அண்ட் மோர் வாயிலாக இதன் இயக்குனர்கள் மகேஷ்ராஜன் மற்றும் சரஸ்வதி ஆகியோர் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிய முயற்சியாக தமிழகத்தில் முதன் முறையாக சமூகத்தில் உயர்ந்த பணிகளில் பணி புரிபவர்களின் பாடல் பாடும் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக புதிய பாடல் பயிற்சி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அசத்தியுள்ளனர்.
கோவை அவினாசி சாலை ஃபன் ரிபப்ளிக் வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள விண்ட்ஸ்டோன் ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபல பின்னணி குரல் கலைஞர் எஸ்.என்.சுரேந்தர் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து பாடல்கள் பாடுவதில் உள்ள சின்ன சின்ன நுணுக்கங்களை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்து கூறினார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,
சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களது மன அழுத்தத்தை போக்கும் விதமாக பாடுவதை முறையாக பயிற்சி அளித்து அவர்களை நல்ல பாடகர்களாக மாற்றுவதாக தெரிவித்தார். நிகழ்சியில் சுபாஷினி,ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு