June 23, 2018
தண்டோரா குழு
பாஜக தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருவதாக பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் பூனம் மகாஜன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக மக்கள் திறமை வாய்ந்தவர்கள். பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு தேவையான பல திட்டங்களை செய்து வருகிறது. நான் தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக வருகிறேன். பாஜக இளைஞரணி நாட்டின் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அக்கறை செலுத்தி பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.