November 24, 2021
தண்டோரா குழு
திருப்பூரில் இன்று நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையத்திற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விற்கு கோவை மாவட்ட பாஜக வினர் 200க்கும் மேற்பட்டோர் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.இதனையடுத்து திருப்பூர் செல்லும் அவர் அங்கு நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகம் புதிய கட்டடம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
வரவேற்பு நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.