• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேர்காணல்

January 29, 2022 தண்டோரா குழு

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவையை பொறுத்தவரை மாநகர பகுதியில் 100வார்டுகளும் புறநகர் பகுதியில் 7நகராட்சிகள்,33பேரூராட்சிகள்,
உள்ளன. இதில் பாஜக,அதிமுக, திமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட பல்வேறு கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் நேர்காணல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தில், மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளித்தவர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேர்காணல் நடத்தினார். இதில் அதிகமாக பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாஜக,அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எட்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் படிக்க