September 30, 2022
தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் ஆ.ராசா குறித்தும் இழிவாக பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஜாமீன் கோரி பாலாஜி உத்தம ராமசாமி தரப்பில் கோவை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர்பாலாஜி உத்தமராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
15 நாட்கள் தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.