November 25, 2017
தண்டோரா குழு
பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் கமல் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு எது தேவையோ அதுவே எனது தேவையாகும். என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன்.பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்கலாம். அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது, ஆனால், தோல்வி பயம் இல்லை. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை நான் ஆதரிக்க மாட்டோம். தமிழக அரசியலில் என்னை முன்னிறுத்தாமல் மாற்றத்தை முன்னிறுத்துகிறேன், மாற்றத்தை விரும்புகிறவர்கள் என்னை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.