• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக, அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பது தான் சிபிஎம்மின் தேர்தல் உக்தி – ஜி.ராமகிருஷ்ணன்

January 18, 2019 தண்டோரா குழு

பாஜக, அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பது சிபிஎம்மின் தேர்தல் உக்தி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவை காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,

சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஜனவரி 22 திருநெல்வேலி நிகழ்ச்சியிலும், 23ஆம் தேதி திருச்சியில் விசிக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கேரளாவில் பிரதமர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் பேசுவது வேதனையானது. எந்த அரசியல் சட்டம் மீது பிரமாணம் எடுத்து பதவி எடுத்துக்கொண்டாரோ அதற்கு எதிராக பேசுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் யாரும் பேசவில்லை. கொடநாடு விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கோடநாடு விவகாரம் தொடர்பாக பதிலளிக்காமல் , சைனும், மனோஜையும் கைது செய்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்ட வரம்பிற்கு மீறி எதிர்க்கருத்தை சொல்பவர்களை கைது செய்வது நியாயமற்றது. அதற்கு முதல்வர் பதில் சொல்லாமல் இருப்பதும் நியாயமற்றது. தன் மீது குற்றச்சாட்டு இல்லையென்றால் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உட்படுத்த வேண்டும். உண்மையை மூடி மறைப்பதற்காக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

முதல்வர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு வருவது, தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கொடநாடு விவகாரம் மர்ம முடுச்சுகள் நிறைந்ததாக உள்ளது. மேத்யூ சாமுவேல் எந்த கட்சியை சார்ந்தவர்? வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் சொல்வது மூலம் அனைவரும் கேள்வி கேட்க தார்மீக பொறுப்பு உள்ளது. அதிமுக தான் எதிர்க்கட்சியை காரணம் காட்டி திசைதிருப்ப பார்க்கிறது.

பாஜக, அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பது சிபிஎம்மின் தேர்தல் உக்தி. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை பாஜக, திரிணாமுலை எதிர்த்து தான் தேர்தலில் நிற்க உள்ளோம். நாளை மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அதில் நாங்க பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய ஒரே மாதிரி தேர்தல் கூட்டணி அமையப்போவதில்லை, மாநிலத்திற்கு கூட்டணி மாறுபடும். அதன்படி திமுக எடுத்த முடிவு. பாஜகவை தோற்கடித்த பிறகு மாற்று அரசு மதசார்பற்று அரசு அமைக்க முடிவு எடுக்க வேண்டும் என்பது சிபிஎம்மின் முடிவு என்றார்.

மேலும் படிக்க