• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவையும் பிரதமரையும் திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா ? – வானதி ஸ்ரீனிவாசன்

July 19, 2021 தண்டோரா குழு

கொங்கு நாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது.கட்சியின் பொறுப்பாளராக எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளோம். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளை கொங்குநாடு தற்போதைய அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு இருக்குமென வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் ஆடிட்டர் ரமேஷ் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்,மாநில பொது செயலாளர் ஜி.கே செல்வகுமார், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பிரேம்குமார்,மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷின் படத்துக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன்,

ஆடிட்டர் ரமேஷ் மறைவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருவதாகவும் தெரிவித்த அவர்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக கோவில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோவில்களை அழகுபடுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வெளியிடும் என்றார். கொங்குநாடு விவகாரத்தில் தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது என தெரிவித்த வானதி, கட்சியின் பொறுப்பாளராக கருத்தை தெரிவிக்க முடியும் எனவும்,இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்றார்.

திமுக குறித்து விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளம்பரம் தேடுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துக்கு, பாஜகவையும் பிரதமரையும் திமுகவினர் விமர்சிப்பது விளம்பரத்துக்காகவா என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க