January 29, 2020
தண்டோரா குழு
இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையுமான சாய்னா நெவால் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் சாய்னா பாஜகவில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக சாய்னா நெவால் கூறும்போது, “இன்று நான் நாட்டுக்காக நற்பணியாற்றி வரும் கட்சியில் இணைந்தேன். கேலோ இந்தியா போன்ற முயற்சிகளுடன் மோடிஜி நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு நிறைய செய்து வருகிறார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.