• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பது தான் சுதந்திர போராட்டம் – முக ஸ்டாலின்

January 19, 2019 தண்டோரா குழு

பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் சுதந்திர போராட்டம் என கொல்கத்தா மாநாட்டில் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்த மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இப்பொதுகூட்டத்தில் பங்கேற்க இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார். இக்கூட்டத்தில் ஸ்டாலின், தேவகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால்( டெல்லி முதலவர் ) , மல்லிகார்ஜூன கார்கே ( காங்கிரஸ்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோரும் கலந்து கொண்னர். மேலும், ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ்மேவானி , சத்ருகன் சின்கா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்., வங்க மொழியில் வணக்கம் சொல்லி உரையை துவக்கினார்.

பின்னர் தமிழில் பேசிய அவர்,

வங்காளத்து புலிகளுக்கு தமிழகத்தின் ஸ்டாலினின் வணக்கங்கள். பல மைல்கள் கடந்து உங்களை காண வந்துள்ளேன். இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் மே மாத நடைபெற உள்ளது. அதற்காக மம்தா இந்த மாநாட்டை கூட்டி உள்ளார். மம்தா அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன். மம்தா பானர்ஜி இரும்பு பெண்மணி. இந்த மேடையில் இந்தியாவை பார்க்கிறேன். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார். நாம் மொழி, கலாச்சாரம் என வேறுபட்டிருந்தாலும் நமது சிந்தனை பா.ஜ,வை வீழ்த்த வேண்டும், மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான்.
நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்கு தான். தோல்வி மோடிக்கு. சில மாதங்களுக்கு முன் மோடி தனக்கு எதிரிகளே இல்லை, எதிர்க்கட்சிகளே இல்லா இந்தியா என கூறி வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளை தான் திட்டுகிறார். நம்மை பிடிக்கவில்லை என்பதை விட அவருக்கு பயமாக உள்ளது. பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்கள், வர முடியாத தலைவர்கள், வர தயங்கி இருக்கும் தலைவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பிரதமர் மோடிக்கு பயமாக இருக்கிறது. பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. நமது ஒற்றுமை மோடியை பயங்கொள்ள வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை காப்போம்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி நூறு கூட்டங்களில் பேசினால் ஆயிரம் பொய்களை சொல்லி இருப்பார். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது இதுதான் மோடியின் சாதனை. இது மக்களுக்குக்கான ஆட்சி அல்ல இது கார்ப்பரேட் அரசு. வங்கியில் ரூ. 15 லட்சம் பணத்தை போடுவேன் என்றவர் மக்களின் தலையில் கல்லை போட்டார். வாயில் மண்ணை போட்டார்.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, காய்கறி, மளிகை விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை உயர்வு, பசியால் துன்பப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு, குடிசை வாழ் மக்கள் உயர்வு என்பது தான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இவர் தான் இந்தியாவை ஆள துடித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் இல்லா ஆட்சி செய்வதாக கூறுகிறார் மோடி. கடந்த 6 மாதங்களாக கூறி வரும் ரபேல் ஊழல் இல்லாமல் என்ன. விஜய் மல்லையா நாட்டை விட்டு செல்வதற்கு முன் அருண் ஜெட்லியை பார்த்து விட்டு சென்றுள்ளார். லலித் மோடி, சுஷ்மா சுவராஜ் உதவியுடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். நீரவ் மோடியை தப்ப விட்டது. இதெல்லாம் ஊழல் இல்லையா? மோடி ஆட்சியில் ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது போல் ஊழலும் குவிக்கப்பட்டுள்ளது.அதிக அதிகாரம் ஊழலுக்கு வழிவழிக்கும். அதையே இந்த ஆட்சி காட்டுகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விடும். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மம்தாவுக்கு நன்றி. மோடி பார்த்து பயப்படும் தலைவர் மம்தா.

மேற்குவங்கத்திற்கு வந்து பிரசாரம் செய்ய மோடியும், அமித்ஷாவும் பயப்படுகிறார்கள். அத்தகைய இரும்பு பெண்மணியாக இருப்பவர் மம்தா. கருணாநிதி மீது மரியாதை கொண்டவர் மம்தா. அத்தகையவரின் அழைப்பை நான் எப்போதும் ஏற்பேன். பா.ஜ.,வை தனிமைப்படுத்த வேண்டும். நாம் தனியாக இருந்தால் அவர்களுக்கு சாதகமாகி விடும். இதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை தான் பா.ஜ.,வை வீழ்த்தும். மம்தாவை கண்டு மோடி, அமித்ஷாவுக்கு பயம். இந்த சிறப்பான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

மேலும் படிக்க