• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி சாதனையை மிஞ்ச பசுவை வைத்து படம் எடுங்கள்-கட்ஜு

May 5, 2017 தண்டோரா குழு

ஹாலிவுட்டில் குரங்குகளை வைத்து படம் எடுத்தது போல், பாலிவுட்டில் பசுக்களை வைத்து படம் எடுத்தால் பாகுபலியின் வசூலை விட பத்து மடங்கு அதிகம் வசூலிக்கலாம் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேயன் கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ம் தேதி அன்று வெளியான பாகுபலி 2 படம் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை முறியடித்து பாலிவுட் படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில், கட்ஜுவின் இந்த கருத்து நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் தொடர் கருத்துக்களை பகிர்ந்து வரும் கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் “ஹாலிவுட்டில் “The Planet of Apes” என்ற ஒரு படம் வெளியானது. அதில் மனிதர்களை குரங்குகள் அடிமைப்படுத்தி ஆள்வது போல் கதை அமையும்.

அது போல் பாலிவுட் இயக்குனர்கள் “The Planet of Cows” என்று படம் எடுத்து பசுக்கள் மனிதர்களை அடிமைப்படுத்தி ஆள்வது போல் காட்சிகள் அமைத்தால் பாகுபலி படத்தை விட பத்து மடங்கு வசூல் செய்யலாம் என்று யோசனை கூறியுள்ளார்.

பசுக்களை தெய்வங்கள் என்று சிலர் கூறி மாட்டிறைச்சி உண்பதை தடுக்க முற்படுவதும், மாட்டிறைச்சி உண்பவர்களை தாக்கும் மனப்போக்கும் பெருகி உள்ள இந்த நேரத்தில், பசுக்களை ஹீரோக்களாக கட்ஜு வர்ணித்து கூறியுள்ளது சமூக வலை பக்கங்களில் வேறுபட்ட கருத்தை பெற்றிருக்கிறது.

இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் காட்டுதீ போல் பரவ, ஒரு நெட்டிசன் கிராபிக்ஸ் முறையில் “The Planet of Cows” என்ற கற்பனை படத்திற்கு ஒரு சுவரொட்டியே வடிவமைத்து விட்டார்.

கட்ஜு அதையும் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிரவே சுவாரஸ்யம் எகிறியது.பலர் இதை வரவேற்று தங்கள் கருத்துக்களை பகிர, சிலர், இதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஏற்கனவே, சினிமா நடிகை கஜோல் தன சமூக வலைத்தளத்தில் இருந்து மாட்டிறைச்சியின் படங்களை அகற்றியதற்கும் கட்ஜு ஆட்சேபம் தெரிவித்திருந்தார். “மாட்டிறைச்சி உண்பது தவறில்லை, ஏறத்தாழ உலகில் உள்ள அனைவரும் மாட்டிறைச்சி உண்கிறார்கள்” என்றும் கருத்து பதிவிட்டுருந்தார்.

மேலும் படிக்க